கன்னியாகுமரியில் நடைபெற்ற குரூப்-1 எழுத்து தேர்வு கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா சவான் பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      கன்னியாகுமரி
02

கன்னியாகுமரி,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 மூலம் துணைஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் இதே நிலையை சார்ந்த பல நிலைகளில் காலியாகவுள்ள 85 பணியிடங்களை நிரப்புவதற்கு, எழுத்துத்தேர்வு நடைபெற்றது. கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா சவான்   , நாகர்கோவில்,  டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித Nஐhசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, டி.வி.டி மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்துக் கல்லூரி ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1-க்கான நடைபெற்ற எழுத்துத் தேர்வினை பார்வையிட்டு தெரிவித்ததாவது:-கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 எழுத்துத்தேர்வுக்காக 4,224 நபர்கள் விண்ணப்பத்திருந்தார்கள். 11 மையங்களில், 18 தேர்வு கூடங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வினை கண்காணிக்க 18 வருவாய்த்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வினை  எவ்வித இடையூறு இல்லாமல் நடைபெற துணை ஆட்சியர்கள் நிலையில் இரண்டு பறக்கும் படை அலுவலர்களும், வட்டாச்சியர் நிலையிலான மூன்று மொபைல் குழுக்களும்  (நடமாடும் தேர்வு கண்காணிக்கும் குழு) அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 11 வீடியோ பதிவாளர்கள் மூலம் தேர்வுகள் பதிவு செய்யும் பணிகள் நடைபெறுகிறது என தெரிவித்தார். இன்று நடைபெற்ற  குரூப்-1  எழுத்துத்தேர்வில் 1,606 நபர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆய்வின் போது நாகர்கோவில் கோட்டாட்சியர்  ஆர்.ராஐகுமார், அகஸ்தீஸ்வரம் வட்டாச்சியர் அருளரசு, தலைமையாசிரியர்கள் குளோரி பாக்கிய லீலா, சிதம்பரதானு, பிலோநிமல், கல்லூரி முதல்வர் முனைவர் டி.சிதம்பரதானு உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: