முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. 3-வது கட்ட சட்டமன்றத் தேர்தல் - ராஜ்நாத்சிங், அகிலேஷ், மாயாவதி வாக்களித்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று  3-வது கட்ட தேர்தல் அமைதியாக நடைபெற்றது. . வாக்குப்பதிவு ஆரம்பத்தில் மந்தமாக இருந்தது. பின்னர் விறுவிறுப்படைந்தது. 

உத்தரப்பிரதேச மாநிலம் பெரிய மாநிலமாக இருப்பதால் 403 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் 73 தொகுதிகளிலும் 2-வது கட்டமாக 11 மாவட்டங்களில் 67 தொகுதிகளிலும் நேற்று 3-வது கட்டமாக 12 மாவட்டங்களில் 69 தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது.

அமைதியான வாக்குப்பதிவு:

நேற்று 3-வது கட்ட தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் அதிக குளிரும் இல்லாமலும் அதிக வெயிலும் இல்லாமலும் இருந்ததால் வாக்காளர்கள் மகிழ்ச்சியாக வந்து வாக்களித்தனர். நேற்று லக்னோ உள்பட 12 மாவட்டங்களில் 69 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. முதல் 2 கட்ட தேர்தல் நடந்த பகுதியில் ஜாட் இனத்தவர்கள் அதிகம் உள்ளனர்.

2.41 கோடி  வாக்காளர்கள் :

நேற்று 3-வது கட்ட தேர்தல் நடந்த பகுதி தாழ்த்தப்பட்டவகுப்பினர் அதிகம் உள்ள பகுதியாகும். இருந்தபோதிலும் சமாஜ்வாடி கட்சி ஆதரவாளர்கள் நிறைந்த பகுதியாகும். கடந்த 2012-ம் ஆண்டு இந்த பகுதியில் நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 55 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பகுஜன்சமாஜ் 6, பாரதிய ஜனதா 5 காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றனர். இந்த 69 தொகுதிகளிலும் 826 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 2 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள் .

தலைவர்கள் வாக்களிப்பு:

இந்த 3-வது கட்ட தேர்தலில் முக்கிய அம்சமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் குடும்பத்தாருடன் வந்து லக்னோ சட்டமன்ற தொகுதியில் வாக்களித்தார். முதல்வர் அகிலேஷ் யாதவ் ,எடவா மாவட்டம் சைபா தொகுதியில் வாக்களித்தார். முன்னாள் முதல்வரும் பகுஜன்சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, லக்னோ தொகுதியில் வாக்களித்தார்.

மாயாவதி:

பெரும்பாலான தலைவர்கள் தங்களுடைய கட்சியே ஆட்சி அமைக்கும் என்று கூறினர். லக்னோவில் உள்ள மால் அவன்யூவில் வாக்களித்த மாயாவதி மொத்த முள்ள 403 தொகுதிகளில் 300 தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகளை போன்று நான் ஆதாரம் இல்லாமல் எதையும் கூறமாட்டேன். நான் பேசிய கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர். அகிலேஷ் யாதவின் ஆட்சியில் மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்று வாக்களித்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாயாவதி கூறினார்.

அகிலேஷ்:

சைபை தொகுதியில் வாக்களித்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அகிலேஷ், காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்றார். அகிலேஷின் சித்தப்பா கூறுகையில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற வேண்டும் என விரும்புகிறேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்