முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகிலேஷ் மீண்டும் முதல்வராவார் - முலாயம் சிங்

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

எடவா : என் மகன் அகிலேஷ் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என்று அவரது தந்தை முலாயம்சிங் கூறியுள்ளார். இதுதான் பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல் என்பது.

சமாஜ்வாடி கட்சியை உருவாக்கியவர் முலாயாம் சிங் யாதவ். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் மத்தியில் ராணுவ அமைச்சராகவும் இருந்தவர். ஒரு காலத்தில் பிரதமர் பதவி கூட அவரை நாடி வந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களில் இவரும் ஒருவர்.

இந்தநிலையில் கடந்த 2012-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றிபெற்றது. இதனையொட்டி தன் மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக்கினார். ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே நல்லுறவு நீடித்தது.  அகிலேஷ் யாதவு தலைமையில் இருந்த அமைச்சரவையில் அவரது சித்தப்பா சிவபால் சிங் அமைச்சராக இருந்தார். ஆதிக்கம் செலுத்துவதில் அகிலேஷூக்கும் சிவபாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிவபால் சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இது முலாயாம்சிங் யாதவுக்கு பிடிக்கவில்லை. இதனால் குடும்ப சண்டை ஏற்பட்டு கட்சிக்கு யார் தலைவர் என்பதில் பிரச்சினை ஏற்பட்டது. முலாயாம் சிங்கை கட்சி தலைவர் பதவியில் இருந்து அகிலேஷ் நீக்கினார். இந்த விவகாரம் தேர்தல் கமிஷன் வரை சென்றது. அகிலேஷுக்கு ஆதரவு அதிகமாக இருந்ததால் கட்சியின் சின்னமான சைக்கிள், அகிலேஷூக்கே ஒதுக்கப்பட்டது. இதனால் கவலை அடைந்த முலாயாம்சிங் ஒதுங்கி இருந்தார். முதல் இரண்டு கட்ட தேர்தலில் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தார்.

முலாயாம் சிங் பேட்டி:

இந்த நிலையில் நேற்று மாநிலத்தில் 3-வது கட்ட தேர்தல் நடைபெற்றது.   எடவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்வந்த் நகர் தொகுதியில் முலாயாம் சிங் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தன் மகன் அகிலேஷ் மீண்டும் வெற்றி பெறுவார். மாநிலத்திற்கு அதிக அளவில் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதனால் சமாஜ்வாடி கட்சி மீண்டும் வெற்றிபெற்று அகிலேஷ் முதல்வராவார் என்றார். உங்களுடைய சகோதரர் சிவபால் சிங் வெற்றிபெறுவாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு அதிக ஒட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று முலாயாம் சிங் பதில் அளித்தார்.

சமாஜ்வாடி கட்சிக்கு ஏன் தீவிர பிரசாரம் செய்யவில்லை என்று கேட்டதற்கு கடந்த 2 கட்ட தேர்தலில் பிரசாரம் செய்தேன். இன்று (நேற்று) 3-வது கட்ட தேர்தல் நடந்துள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தல் உள்ளது. அதில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்வேன் என்று முலாயாம் சிங் பதில் அளித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் தன்னை தத்துப்பிள்ளையாக எடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியது குறித்து கேட்டதற்கு அவர் என்ன சொல்ல விரும்புகிறாரோ அதை அவர் கூறலாம். சமாஜ்வாடி கட்சியைத்தான் உத்தரப்பிரதேச மக்கள் தத்துப்பிள்ளையாக எடுத்துள்ளனர் என்றும் முலாயாம் சிங் பதில் அளித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் 4 கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. 4-வது கட்ட தேர்தல் வரும் 23-ம் தேதியும் 27-ம் தேதி 5-ம் கட்ட தேர்தலும் மார்ச் 4-ம் தேதி 6-வது கட்ட தேர்தலும் மார்ச் 8-ம் தேதி 7-வது கட்டமும் நடக்கவுள்ளது. அத்துடன் உ.பி.யில் சட்டசபை தேர்தல் முடிந்துவிடுகிறது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago