முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-வது ஐ.பி.எல் தொடர்: புனே அணி கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி அதிரடி நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : 10-வது ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அணிகளுக்குத் தடை

ஐ.பி.எல். தொடரில் விளையாட சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. சென்னை அணிக்காக விளையாடி வந்த வீரர்கள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள புனே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டனர். சென்னை அணியின் கேப்டன் டோனியை, புனே அணி 12.5 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. அதன்படி சென்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணியின் கேப்டனாக டோனி செயல்பாட்டார். ஆனால் டோனி தலைமையிலான புனே அணி மோசமாக தோல்வியடைந்தது.

அதிரடி நீக்கம்

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் வருகின்ற தொடரில் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்

புனே அணி 7-வது இடத்துக்கு பின் தங்கியதால் டோனி நீக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. டோனிக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் வருகின்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஐ.பி.எல் தொடரில் டோனி தலைமையிலான அணி 14 போட்டிகளில் விளையாடி 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago