முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊடகங்கள் மீது சானியா மிர்சா பாய்ச்சல்

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

கத்தார் : வரிஏய்ப்பு விவகாரம் குறித்த செய்திகளை வெளியிட்ட ஊட கங்கள் எதிர்மறையான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. கத்தார் ஓபனில் நான் அரை இறுதியில் நுழைந்ததை கண்டுகொள்ளவில்லை என சானியா மிர்சா குற்றம் சாட்டி உள்ளார்.

சேவை வரி ஏய்ப்பு செய்ததாக, 30 வயதான இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான சானியாவுக்கு கடந்த 9-ம் தேதி மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் சம்மன் அனுப்பியது. அதில், ‘‘கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் தெலங்கானா மாநிலத்தின் தூதராக நீங்கள் நியமிக்கப்பட்டீர்கள். அப்போது தெலங்கானா அரசின் சார்பில் உங்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது. ஆனால் இதற்குரிய 14.5 சதவீதம் சேவை வரியை செலுத்தவில்லை. இதுதொடர்பாக நீங்களோ அல்லது உங்களது பிரதிநிதியோ நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதுதொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளி யானது. இதையடுத்து சானியாவின் கணக்காளர் கடந்த 16-ம் தேதி சேவை வரித்துறை ஆணையர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அரசின் சார்பில் ரூ.1 கோடி தொகையானது சானியாவின் பயிற்சியை ஊக்கப்படுத்தவே வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில் சானியா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘கத்தார் டென்னிஸ் போட்டியில் நான் அரை இறுதிக்கு நுழைந்ததை கண்டுகொள்ளாத ஊடகங்களுக்கு பாராட்டுகள். வரிய ஏய்ப்பு தொடர்பான செய்திகள் மட்டும் நூற்றுக்கும் அதிகமாக உள்ளன.

அதில் பலருக்கும் இந்த விவகாரம் குறித்து சரியான புரிதல்கள் இல்லை. இதில் இருந்து ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளலாம். நேர்மறை செய்திகளை விடவும் எதிர்மறை செய்திகளே அதிகம் விற்கின்றன என நினைக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் தனது இணையான செக்குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவாவுன் களமிறங்கிய சானியா மிர்சா கால் இறுதியில் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் கனடாவின் கேப்ரிலா டப்ரோவ்ஸ்கி, குரோஷியாவின் டரிஜா ஜூராக் ஜோடியை வீழ்த்தி யிருந்தது.

இதை தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில் சானியா ஜோடி 3-6, 6-1, 8-10 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அபிகைல் ஸ்பியர்ஸ், சுலோவேனியாவின் கேத்ரினா ஷெர்போட்னிக் ஜோடி யிடம் தோல்வியடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago