முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சக இணைச் செயலாளர் ஸ்ரீமதி அப்ரஜிதா சாரங்கி தலைமையிலான மத்தியக்குழுவினர் பார்

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      சென்னை

இந்த ஆய்வின் போது  மத்திய அரசின் இயக்குநர் காயா பிரசாத், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் கே.பாஸ்கரன்., தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் சாந்தா., மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கஜலட்சுமி., ஆகியோர் உடனிருந்தனர்.

            காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி  ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் புஞ்சை அரசன்தாங்கலில் ரூபாய் 8.30 இலட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்டு  அங்கு செயல்பட்டுவரும்  அங்கன்வாடி மையத்தை மத்திய குவினர் பார்வையிட்டனர். அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் அங்கன்வாடி பணியாளர்கள், பொம்மைகள், வரைபடங்களை கொண்டு குழந்தைகளுக்கு கற்பிப்பதை கேட்டறிந்தனர். பின்னர் களக்காட்டூரில் 3.50 லட்சம் செலவில் பட்டுப்புழு  வளர்ப்பதற்கான மல்பெரி செடி வளர்க்கப்படுவதை பார்வையிட்டனர்.  அங்கு ரூ.1.64 இலட்சம் மதிப்பீட்டில் பண்ணைகுட்டை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பண்ணைகுட்டைக்கு தண்ணீர்வரத்து எவ்வாறு கிடைக்கிறது என்பதையும் கேட்டறிந்தனர். பின்னர் பட்டுப்புழுக்கள் மல்பெரி  இலைகளை தின்று பல்வேறு பருவங்களில் வளர்வதையும் பட்டுப்புழுலிருந்து எடுக்கப்படும் பட்டு நூலின் தரம் மற்றும் சந்தைப்படுத்துதல் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் கரிகிலியில் நீர்வடிப்பகுதி மேலாண்மை பணிகளான கால்நடை குட்டை, பள்ளக்குட்டை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டனர்.

 

பின்னர் வெள்ளைப்புதூர் - வேடதாங்கல்  சாலையில் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் சாலையோர மரங்கள் நடப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். ரூ.21.86 இலட்சம் மதிப்பீட்டில் பசுமை  குடில் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு பராமரிப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சி குறித்து கேட்டறிந்தனர். நாற்றங்காலில் வளர்க்கப்பட்டு வரும் பல்வேறு செடிகள் குறித்தும் அவற்றின் எண்ணிக்கை குறித்தும் அவற்றை எங்கெங்கு நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன என்கிற விபரத்தை கேட்டறிந்தனர். மேலும் விதைகள் முளைக்க வைப்பதற்கு தாய் பதியம் மண் தளத்தை பார்வையிட்டு முளைத்த பின் அது எவ்வாறு, எத்தனை நாட்களில் பாலித்தீன் பாக்கெட்களில் வைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன என்கிற விபரங்கள் கேட்டறிந்தனர். பின்னர் பசுமை குடில்  நாற்றங்கால் தொடர்பாக பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டனர்.

            பின்னர் வெள்ளைப்புதூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து மக்கும் குப்பை மக்கா குப்பை  என பிரித்து கையாள்வது மற்றும் மட்கும் குப்பையிலிருந்து  உரம் தயாரிக்கும் முறையை கேட்டறிந்தனர். பின்னர் மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்டு மண்புழு  உரம் தயாரிக்க பின்பற்றப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் 0.21 லட்சம் மதிப்பிட்டில் அமைக்கப்பட்டுள்ள மீள் நிரப்புக்குழியை பார்வையிட்டு அதன் பயனை கேட்டறிந்தனர். 

            பின்னர் வேடங்தாங்கல் ஊராட்சியில் ரூபாய் 8.90 லட்சம் மதிப்பீட்டில் வரத்துக்கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதையும் பார்வையிட்டனர்.

            சித்தாதூர் கிராம குளம் ரூ.15.45 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதையும் நீர்வரத்து உபரிநீர் செல்வதற்கான கட்டமைப்பு மற்றும் படிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டனர். குளம் வெட்டப்பட்டுள்ள ஆழம் மற்றும் தண்ணீர் தேங்கும்போது அதன் பயன்பாடு குறித்தும் கேட்டறிந்தனர்.

             இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் கே.பாஸ்கரன்., தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் சாந்தா., மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கஜலட்சுமி., ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் முத்துமீனா, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சித் துறை வை.ஜெயக்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். மத்திய அரசின் இயக்குநர் காயா பிரசாத் மற்றும் வல்லூநர் குழுவினர் ஸ்ரீசோனல் குல்ஷ்ரேஸ்தா, ஸ்ரீபங்கஜ்டுபேர்கர், ஸ்ரீநிதேஷ்குமார், ஸ்ரீஜிதேந்திர ஆனந்த், ஸ்ரீவிபேக் ஆனந்த், ஸ்ரீ சுமன்ஜித் அய்ச், ஸ்ரீசதீஷ்ரஞ்சன் சின்கா,  ஸ்ரீவிக்ரம் பர்கவா ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்