முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நடைபெற்ற தொகுதி- ஐன் முதல்நிலை தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர்; பார்வையிட்டு ஆய்வு:

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      சென்னை

   திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நடைபெற்ற தொகுதி-ஐன் தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-ஐன் முதல்நிலை எழுத்து தேர்வு 10 தேர்வு கூடங்களில் 10  முதன்மை கண்காணிப்பாளர்களும்,   176 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 10 ஆய்வு அலுவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். இக்கூட்டத்தில்; அனைத்து தேர்வு கூடங்களுக்கும், மாவட்ட கருவூலத்திற்கும் மற்றும் மொபைல் டீம் அலுவலர்களுக்கும், போதிய பாதுகாப்பு அளித்திட காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தேர்விற்கு திருவள்ளுர்; கோட்டாட்சியர் மற்றும் திருவள்ளுர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் தலைமையில் இரண்டு பறக்கும்படை குழுக்களும்  இரண்டு நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

3524 விண்ணப்பதாரர்கள்; எழுத விண்ணப்பித்து 2146 நபர்கள் கலந்து கொண்டனர். 1378 தேர்வு எழுத வரவில்லை. 60.897 சதவிகித நபர்கள்  தேர்வில் கலந்து கொண்டனர் என்று கூறினார்.

மாவட்ட கலெக்டர் மணவாள நகர் கிரைஸ்ட் கிங் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி தேர்வு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ்ஆய்வுகளின் போது திருவள்ளுர் வட்டாட்சியர் கார்க்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்