முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஞ்சிலுவை சங்கம் சார்பில் தாய் சேய் நல வாகனங்கள் கலெக்டர் நடராஜன் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் நிதிஉதவியுடன் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் தாய்சேய் நல வாகனங்களை கலெக்டர் முனைவர் நடராஜன் கொடி அசைத்துதொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர்  முனைவர்;.ச.நடராஜன் தமிழ்நாடு அரசு உதவியுடன் இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக செயல்படுத்தப்படும் தாய் சேய் நல ஊர்தியினை கொடியசைத்து துவக்கி வைத்து வாகனத்திற்கான சாவியினை ஓட்டுநரிடம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-  தமிழ்நாடு அரசு கருவுற்ற தாய்மார்கள் மற்றும் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு உதவியுடன் இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக தற்போது, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையுடன் பாதுகாப்பாக தங்களது வீடுகளுக்கு சென்று சேர்ந்திட பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கட்டணமில்லா தாய் சேய் நல ஊர்தி செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டணமில்லா ஊர்தியினை 102 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு உதவியுடன் இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக செயல்படுத்தப்படும் இந்த கட்டணமில்லா தாய் சேய் நல ஊர்தியானது முதற்கட்டமாக தற்போது ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படுத்தப்படவுள்ளது. இவ்வாகனத்தின் பயன்பாட்டின் அடிப்படையில் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இவ்வாகனத்தினைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கூடுதல் வாகனங்கள் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.

அதன்பிறகு, மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இளையோர் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வளர்ந்திருந்த சிறிய அளவிலான சீமைக் கருவேல மரக்கன்றுகளை முற்றிலுமாக அகற்றினார்கள். இப்பணியில் ஈடுபட்ட இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவ, மாணவியர்களை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பாராட்டி வாழ்த்து  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் , துணை சேர்மன் ஹாரூன், பொருளாளர் சி.குணசேகரன், புரவலர்கள் எம்.செந்தில் குமார், ஜே.ரமேஷ்பாபு, மாவட்ட செயலாளர் எம்.ராக்பாண்ட் மதுரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்