முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயனாளிகளுக்கு விருப்புரிமை நிதித் திட்டத்தின் கீழ் காசோலைகளை மாவட்ட கலெக்டர் சிவஞானம், வழங்கினார்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      விருதுநகர்
Image Unavailable

   விருதுநகர்.- 2015-16ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.28,000 மதிப்பிலான காசோலைகளையும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர்; அ.சிவஞானம்,  வழங்கினார்கள்

 விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்;  8 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் ரூ.1,60,000  மதிப்பிலான காசோலைகளையும், 2015-16ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.28,000 மதிப்பிலான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர்; அ.சிவஞானம்,  வழங்கினார்கள்.
 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம், தலைமையில் இன்று (20.02.17) நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இன்று(20.02.17) மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
 முன்னதாக விருதுநகர் மாவட்ட தாட்கோ மூலமாக 2016-17ஆம் ஆண்டிற்க்கான மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதித் திட்டத்தின் கீழ் அருப்புக்கோட்டை வட்டம் பாலவநத்தம் கிராமத்தை சேர்ந்த திருமதி.செல்வி அவர்களுக்கு ஜவுளி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், சிவகாசி வட்டம் தாழிகுளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமதி.பார்வதி அவர்களுக்கு அரிசி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், திருவில்லிபுத்தூர் வட்டம் குன்னூர் கிராமத்தை சேர்ந்த செல்வி.ருக்மணி(மாற்றுத்திறனாளி) அவர்களுக்கு அரிசி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், திருவில்லிபுத்தூர் வட்டம் வத்திராயிருப்பு கிராமத்தை சேர்ந்த திருமதி.ஆனந்தி அவர்களுக்கு அரிசி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், விருதுநகர் வட்டம்; இந்திரா காலனியைச் சேர்ந்த திருமதி.முத்துலட்சுமி அவர்களுக்கு ஜவுளி வியாபார தொழில்  தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், இராசபாளையம் வட்டம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார்(மாற்றுத்திறனாளி) அவர்களுக்கு மளிகைக்கடை துவங்குவதற்க்கு ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், சிவகாசி வட்டம் கிழக்கு தெருவைச் சேர்ந்த திருமதி.செல்வி(மாற்றுத்திறனாளி) அவர்களுக்கு கட்பீஸ் தொழில்  தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், சிவகாசி வட்டம் ரெங்கசமுத்திரபட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி.முத்து அவர்களுக்கு ஜவுளி வியாபார தொழில்  தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும் ஆக மொத்தம் 8 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.1,60,000  மதிப்பிலான காசோலைகளையும்;,

அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலம் 2015-16ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்ட அளவில் 12ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி திவ்யாவிற்கு ரூ.6000 க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், இரண்டாமிடம் பெற்ற மாணவி விநாயகலட்சுமி ரூ.4000 க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், 10ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற நிரஞ்சனா, எழில்வேந்தன், இளமாறன் ஆகிய மாணவ மாணவிகளுக்கு ரூ.3000 க்கான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், இரண்டாமிடம் பெற்ற யோகப்பிரியா, பிரகாஷ் ஆகிய மாணவ மாணவிகளுக்கு ரூ.2000 க்கான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், மூன்றாமிடம் பெற்ற வர்ஷினி, கல்பனா, ஜெயபிரியா, மதன்குமார், குருபிரசாத் ஆகிய மாணவ மாணவிகளுக்கு ரூ.1000 க்கான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் ஆக மொத்தம் 12 மாணவ மாணவிகளுக்கு ரூ.28,000 மதிப்பிலான காசோலைகள்; மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்; அ.சிவஞானம்,  வழங்கினார்கள்.

 இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன்,  தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் இரா.செந்தில் ஆறுமுகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.விஜயாம்பிகா, தனித்துணை ஆட்சியர் (முத்திரை) திருமதி.உஷா, உதவி ஆணையர் (கலால்) சங்கரநாராயணன், தாட்கோ மேலாளர் திருமதி.ஜானகி உட்பட பல்வேறுதுறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்