முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதியில் தஞ்சமடைந்த நாகாலாந்து எம்எல்ஏக்கள் : முதல்வர் ஜெலியாங்கை பதவி நீக்க கோரிக்கை

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

கொகிமா  - நாகாலாந்து முதல்வர் ஜெலியாங்கை பதவியில் இருந்து நீக்கக் கோரி,  அம்மாநில எம்எல்ஏக்கள் தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க நாகாலாந்து அரசு முடிவு செய்தது. இதற்கு பழங்குடியின அமைப்பினரும், எம்எல்ஏக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். .

எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி
இந்நிலையில் இடஒதுக்கீடு விவகாரத்தை சரியாக கையாளாத முதல்வர் டி.ஆர்.ஜெலியாங்கை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் நிபியூ ரியோவை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆளும் நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ரியோ
மேலும் மாநிலத்தை விட்டு வெளியேறி, அசாமின் கசிரங்கா தேசிய உயிரியல் பூங்கா அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியில் தஞ்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ரியோ அந்த சொகுசு விடுதிக்கு சென்று எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுகுறித்து நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் சுரோஜெலி லைஜெய்ட்சூ கூறும்போது, ‘‘கட்சியின் முடிவுக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் கட்டுப்படுவார்கள். விரைவில் மாநிலத்துக்கு திரும்பி தொகுதி பணியிலும் ஈடுபடுவார்கள்’’ என நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக கடந்த வாரம்  49 எம்எல்ஏக்களில் 42 பேர் லைஜெய்ட்சூவுக்கு ஆதரவு தெரிவித்து, அவரை முதல்வராக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் திடீரென 20 எம்எல்ஏக்கள் இம்முடிவில் இருந்து பின் வாங்கியதால், ரியோவை முதல் வராக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago