முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்கு சூடான் உள்நாட்டு போரில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

ஜுபாவி   - தெற்கு சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் போரட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட நபர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சையத் ஃபருக் பாஷா என்பது தெரியவந்துள்ளது. கொலை சம்பவமானது தெற்கு சூடானின் தலைநகரான ஜுபாவிலிருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் நடந்ததாக இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சையத் ஃபருக் பாஷா சுடப்பட்டார்
இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரிகள் தரப்பில், "கடந்த வாரம் தெற்கு சூடானிலுள்ள சர்ச்சைக்குரிய பகுதியான அபியீ பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது போராட்டக்கரார்களால் சையத் ஃபருக் பாஷா சுடப்பட்டுள்ளார். இதில் அவரது ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டது. தெற்கு சூடானில் கடந்த ஆண்டு துவங்கிய உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட முதல் இந்தியர் சையத் ஆவார்" என்று கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் சுஷ்மா சுவராஜ்
சையத் ஃபருக் பாஷாவின் மரணம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் சையத் ஃபருக் பாஷாவின் குடும்பத்தினருடன் பேசியுள்ளோம். அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியும் அளித்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார். சையத் ஃபருக் பாஷாவின் குடும்பத்தார்  செய்தியாளர்களிடம் கூறியதாவது ,தெற்கு சூடானில் இருப்பதற்கான ஆபத்துகளை சையத் அறிந்திருந்தும் கடந்த 2 ஆண்டுகளாக அதனை எதிர்கொண்டு வந்தார். இந்தச் சம்பவம் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது" என்றனர்.

ஆபரேஷன் சங்கட் மோச்சான்
முன்னதாக கடந்த ஆண்டு தெற்கு சூடானில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக 'ஆபரேஷன் சங்கட் மோச்சான்' என்ற பெயரில் மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் நேரடி கவனிப்பில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக சி-17 விமானம் மூலம் 156 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இருப்பினும் சில மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இங்குதான் உள்ளது என்று கூறி இந்தியா வர மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago