முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனிலவுக்காக மக்கள் நிலவுக்கே செல்லக் கூடும்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - நிலவில் கொட்டிக் கிடக்கும் ஹீலியம் வாயுவை பயன்படுத்தி நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நிலவின் மண்ணில் ஹீலியம்
டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் அவர் பேசியதாவது: நிலவில் ஹீலியம்-3 என்ற வாயு ஏராளமாக கொட்டிக் கிடக்கிறது. நிலவில் சுரங்கம் தோண்டி அந்த மண்ணை பூமிக்கு எடுத்து வந்து, ஹீலியம் வாயுவை எளிதாக பிரித்து எடுக்க முடியும். இந்த வாயு மூலம் இந்தியாவின் எரிசக்தி தேவையை வேண்டிய அளவுக்கு பூர்த்தி செய்து கொள்ள முடியும். வரும் 2030-க்குள் அதற்கான இலக்கை அடைய முடியும். தற்போது அந்த திட்டத்துக்குத் தான் இஸ்ரோவும் முன்னுரிமை அளித்து வருகிறது. நிலவில் இருந்து ஹீலியம்-3 வாயுவைப் பிரித்து எடுக்கும் திட் டத்தில், பிற நாடுகளும் ஈடுபட் டுள்ளன. அதனால் வருங்காலங்களில் தேனிலவுக்காக, மக்கள் நிலவுக்கே செல்லக் கூடும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்