முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமி ரித்திகாவின் குடும்பத்துக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் :ஜி.கே. வாசன்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - சிறுமி ரித்திகாவின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.  இது தொடர்பாக  நேற்று  அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது , ''சென்னை, எண்ணூரில் ரித்திகா என்ற 3 வயது சிறுமி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்திற்கு உரியது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுதர வேண்டும். சிறுமி ரித்திகாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், நகைக்காக கொலை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவும், காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு சிறுமி ரித்திகாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களை தடுத்து பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பை உறுதி படுத்திக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை'' என்று வாசன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்