முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சியைப் போக்க விரிவான திட்டம் தயாரிக்கப்படும்: முதல்வர் வாக்குறுதி

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தமிழகத்தில் நிலவும் வறட்சியைப் போக்க விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. இதனைத் தொடர்ந்து நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறையில் முறைப்படி முதல்வராகப் பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிசாமி 5 முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, "தமிழகத்தில் நிலவும் வறட்சியைப் போக்க விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் வறட்சியினால் பாதிக்கப்பட்ட கிராம மற்றும் நகர மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றியதோ அதே வழியில் இவ்வரசும் செயல்படும்.

தேர்தல் வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தின் கீழ் உழைக்கும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50சதவீதம்  மானியம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் மீனவர்களுக்கான தனி வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 5000 வீடுகள் கட்டப்படும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை இருமடங்காக உயத்தப்படும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழக்கப்படும்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago