முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹபீஸ் சயீத் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மும்பை தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட ஹபீஸ் சயித் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. முன்னதாக பல்வேறு காரணங்களுக்காக கடந்த மாதம் 30-ம் தேதி முதல் சயீத் வீட்டுக் காவலில் இருந்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் சயீத் பெயர் சேர்க்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சயீத் தவிர அவரது நெருங்கிய உதவியாளர் காஸி காஷிப், பைசலாபாத்தைச் சேர்ந்த அப்துல்லா ஒபைத், மார்கஸ் இ தய்பாவைச் சேர்ந்த ஜாபர் இக்பால், முரிடிகேவைச் சேர்ந்த அப்துல் ரகுமான் அபித் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜமாத் உத் தவா மற்றும் பலா இ இன்சானியத் (எப்ஐஎப்) ஆகிய அமைப்புகளின் பெயரில் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 இந்தியா  வலியுறுத்தல் :
இதற்கிடையில், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் ஹபீஸ் சயித் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் சவுரப் கூறும்போது, "ஹபீஸ் சயீத் ஒரு சர்வதேச குற்றவாளி, மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதுடன், பாகிஸ்தானின் அண்டை மாநிலங்களில் தீவிரவாதத் தாக்குதலையும் நடத்தி வருகிறார். ஹபீஸ் சயித் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சர்வதேச நடவடிக்கை தேவை. அவர்கள் நீதியின் முன்னால் கொண்டு வரப்பட வேண்டும்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்