முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான கண்காணிப்புக்குழுக் கூட்டம்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      பெரம்பலூர்
Image Unavailable

2.3.2017 முதல் 31.3.2017 வரை 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளும், 8.3.2017 முதல் 30.3.2017 வரை 10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளும் நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வுகளை சிறப்பாக நடத்துவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான பொதுத்தேர்வு கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் க.நந்தகுமார்தலைமையில் நேற்று(20.2.2017) நடைபெற்றது.

 

 

 

பொது தேர்வு

 

 

பெரம்பலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு 32 மையங்களில் நடைபெறவுள்ளது. 136 பள்ளிகளைச் சேர்ந்த 5,245 மாணவர்கள், 4,519 மாணவிகள் என மொத்தம் 9,764 மாணவ-மாணவிகள் 10 ஆம்வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர்.

 

12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு 24 மையங்களில் நடைபெறவுள்ளது. 68 பள்ளிகளைச் சேர்ந்த 4,698 மாணவர்கள், 4,572 மாணவிகள் என மொத்தம் 9,270 மாணவ-மாணவிகள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர்.

 

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட கலெக்டர் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு வினாத்தாள்களை உரிய பாதுகாப்புடன் உரிய நேரத்திற்குள் கொண்டுசெல்ல வேண்டும் என்றும், தேர்வு மையங்களிலும் போதிய பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவேண்டும் என்று காவல் துறை அலுவலர்களுக்கு; அறிவுரை வழங்கினார். மேலும், தேர்வு நாட்களில் மின்சாரம் தடையின்றி கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டுமென்றும், மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்குச் செல்ல ஏதுவாக உரிய நேரத்தில் போதிய அளவிலான பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர்(பொ) சுகுமாறன், பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் ராஜ்குமார், அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் ராஜா உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago