முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேச மாநிலத்தில் 4-வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிகிறது

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

அலகாபாத் : உத்தரபிரதேச மாநிலத்தில் 4-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனையொட்டி கடந்த பல நாட்களாக அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3 கட்ட தேர்தல் முடிந்தது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபைக்கு முதல் கட்டமாக 73 தொகுதிகளுக்கும் 2-வது கட்டமாக 69 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக 63 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்துமுடிந்துவிட்டது. இதனையொட்டி 4-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்தது. பாரதிய ஜனதாவை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் மற்றும் கட்சியின் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். நேற்று அலகாபாத் அருகே நடந்த பா.ஜ. தேர்தல் பிரசார பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அதேமாதிரி சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் அகிலேஷ் யாதவ், முலாயாம்சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

மாலையுடன் நிறைவு

இந்தநிலையில் 4-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. 12  மாவட்டங்களில் 53 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago