முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      அரியலூர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" நேற்று (20.02.2017) நடைபெற்றது.

 

வீட்டுமனை பட்டா

 

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 235 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், இந்திய அளவில் மும்பையில் நடைபெற்ற செவித்திறன் குறையுடையோர்களுக்கான சிறப்பு விளையாட்டு போட்டி நடைபெற்றதில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுக்கா, கொல்லாபுரம் ஹெலன் கெல்லர் செவித்திறன் குறையுடையோர் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் சதுரங்க போட்டியில் முதல் இடத்தில் தங்கம் வென்றும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தில் வெள்ளி வென்றும், தனிநபர் நடனத்தில் முதல் பரிசினையும், குழு நடனத்தில் முதல் பரிசினையும் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவ, மாணவியர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டது.

மேலும், புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில் 21 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.49 இலட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் வங்கிகள் மூலம் நேரடி காசோலைகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு மண்வள அட்டையினையும் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத் தி;ட்டம்) மங்கலம், முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, இணை இயக்குநர் வேளாண்மை சதானந்தம், புதுவாழ்வுத் திட்ட மேலாளர் முத்துவேல் மற்றும் மாணவ, மாணவியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்