முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், கடலூர் கிராமத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பெண் பிள்ளைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் கஜலட்சுமி உத்தரவு

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செய்யூர் வட்டம், கடலூர் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி-கஸ்தூரி தம்பதியினரின் மனவளர்ச்சி குன்றிய வசந்த பிரவீனா, மணிமேகலை, குணஸ்ரீ ஆகிய பெண் பிள்ளைகளுடன் நேரில் வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் உதவித்தொகை கேட்டு மனு அளித்தனர். ஏற்கனவே ஒரு பிள்ளைக்கு மட்டும் உதவித்தொகை ரூ.1500/- கிடைத்து வருகிறது. மற்ற இரண்டு பெண் பிள்ளைகளுக்கு உதவித்தொகை தேவை எனக் கேட்டனர். மனவளர்ச்சி குன்றிய உதவித்தொகை வாங்காத மற்ற இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் மாதாந்திர உதவித்தொகை தலா ரூ.1500/- உடனடியாக வழங்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். மேலும் அவர்களது வறுமை நிலையை போக்கும் வகையில் பிள்ளைகளின் தகப்பனாருக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

 

மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு தலா 4560 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் மாவட்ட வழங்கல் அலுவலத்தின் சார்பில் 15 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை அடங்கிய 314 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர். கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.

 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் க.சௌரிராஜன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) ராணி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் கே.இளங்கோவன், மாவட்ட வழங்கல் அலுவலர் வ.பவணந்தி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago