முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-வது ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்: ரூ.14.5 கோடிக்கு பென் ஸ்டோக்சை வாங்கிய புனே அணி !

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : பெங்களூரில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சை 14.5 கோடி ரூபாய்க்கு புனே அணி ஏலம் எடுத்தது. ரபாடாவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

10–வது ஐ.பி.எல்.

10–வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5–ம் தேதி முதல் மே 21–ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 43 வெளிநாட்டினர் உள்பட 139 வீரர்கள் 8 அணிகளால் தக்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் கழற்றி விடப்பட்டனர். அணிகளால் விடுவிக்கப்பட்டவர்கள், புதியவர்கள் என்று 130 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 357 வீரர்கள் இந்த முறை ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று முன்தினம் தெரிவித்தது. இதில் 227 பேர் எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாதவர்கள் ஆவர்.

ரூ.2 கோடிக்கு மேத்யூஸ்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை தொடங்கியது. இங்கிலாந்து வீரர் இயான் மோர்கனை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது. பவன் நெஹியை பெங்களூர் அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேத்யூசை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

கடும் போட்டி

இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான பென் ஸ்டோக்சை ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி இருந்தது. இறுதியில் பென் ஸ்டோக்சை புனே அணி ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. மதியம் வரையில் இதுவே அதிகபட்ச ஏலத்தொகையாக இருந்தது.

ரூ.5 கோடிக்கு...

நிகோலஸ் பூரனை மும்பை இண்டியன்ஸ் 30 லட்சம் ரூபாய்க்கும், தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.5 கோடிக்கும் ஏலம் எடுத்தன. இதேபோல் கோரி ஆண்டர்சனையும், அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி வாங்கியது. நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட்டை 5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்