முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர்மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 42 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல் வேலைவாய்ப்பு கடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டா மாற்றுதிறனாளிகளுக்கு உதவி முதியோர் உதவித் தொகை காவல்துறை பாதுகாப்பு மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 442 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர்  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இம்மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தின் மூலம் திட்டங்களின் கீழ் 5 பயனாளிகளுக்கு 5 சதவிகித மானியத் தொகையாக ரூ.75,700-ற்கான காசோலைகளையும், 1 பயனாளிக்கு ரூ.19,000- மதிப்பிலான நவீன செயற்கை அவயமும், மற்றும் தமிழ்நாடு விளையாhட்டு மேம்பாட்டு ஆணையம், வேலூர் பிரிவின் சார்பாக 2015-2016 ஆம் ஆண்ழல் தேசிய அளவிலான டேக்வோண்டோ, பளுதூக்குதல் மற்றும் பூப்பந்து விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்ற 36 வீரர் வீராங்கனைகள் விளையாட்டு உபகரணங்கள் வாங்கும் பொருட்டு தலா ரூ.6000ஃ-, ரூ.4000ஃ-, ரூ.2000ஃ- வீதம் மொத்தம் ரூ.1,34,000 மதிப்பிலான காசோலைகளையும் ஆக மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 28 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.அ.ராமன்,  வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் விஜயகுமாரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரமேஸ்வரி,; சமூக பாதுகாப்புத் துறை அலுவலர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்