முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.110 கோடிக்கு ஒப்பந்தமாகி விராட்கோலி புதிய சாதனை

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : சர்வதேச விளையாட்டு நிறுவனமான ‘பூமா’ விராட் கோலியை 8 ஆண்டுக்கு ரூ.110 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதால் இந்திய வீரர்களில் ஒருவர் ஒரே விளம்பரத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் ஆகியிருப்பது புதிய சாதனையாகும்.

பல்வேறு சாதனை

உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்பவர் விராட் கோலி. 28 வயதான அவர் கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் என 3 நிலைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி சமீபகாலமாக தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். அவர் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்து இருந்தார். மற்றொரு முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறும் போது, விவியின் ரிச்சர்ட்சும், டெண்டுல்கரும் செய்த கலவை விராட் கோலி எனக் குறிப்பிட்டு இருந்தார்.

ரூ.110 கோடிக்கு..

விராட் கோலி தனது ஆட்டம் மூலம் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் வாயிலாகவும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் விராட் கோலி ஒரு விளம்பரத்தில் மட்டும் ரூ.110 கோடிக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். சர்வதேச விளையாட்டு நிறுவனமான ‘பூமா’ விராட் கோலியை 8 ஆண்டுக்கு ரூ.110 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் ஒரே விளம்பரத்தில் இவ்வளவு அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இது புதிய சாதனையாகும்.

டெண்டுல்கர் - டோனி

டெண்டுல்கர், டோனி ஆகியோர் பல விளம்பர நிறுவனங்களில் சேர்ந்து தான் ரூ.100 கோடிக்கு மேல் ஒப்பந்தமாகி இருந்தனர். 24 ஆண்டு காலம் விளையாடிய டெண்டுல்கர் 50 விளம்பர நிறுவனங்கள் மூலம் ரூ.500 கோடிக்கு மேல் ஒப்பந்தமாகி இருந்தார். இதே போல் டோனியும் பல விளம்பர நிறுவனம் மூலம் ரூ.180 கோடிக்கு மேல் ஒப்பந்தம் ஆகி இருந்தார். விராட் கோலி ஒப்பந்தமாகி உள்ள ‘பூமா’ நிறுவனத்தில் பிரபல தடகள வீரர்களான உசேன் போல்ட், ஆசபா போவெல்(ஜமைக்கா), கால்பந்து வீரர்கள் ஹென்றி, ஆலிவர் ஆகியோர் ஏற்கனவே விளம்பர தூதுவர்களாக உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்