முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி காசிவிஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      நீலகிரி

 

ஊட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

 

 

அன்னதானம்

 

 

ஊட்டி காந்தள் தட்சிணாமூர்த்தி மடாலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சியம்மன் உடனமர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் வரும் 24_ந் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. விழாவின் முதல் நாளான மாலை 3 மணிக்கு ஆதிபராசக்தி மகளிர் குழு, காந்தள் ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றம் மற்றும் ஸ்ரீ காசி விசாலாட்சியம்பாள் மகளிர் குழு சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

 

விழாவின் முக்கிய நாளான 24_ந் தேதி காலை 7 மணிக்கு கால சந்தி பூஜையும், 11 மணிக்கு உச்சிகால பூஜையும், 11.30 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

 

 

மகா தீபாராதனை

 

 

தொடர்ந்து பகல் 2 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகாயாக பூஜையும், மாலை 3 மணிக்கு பிரதோச மும், மாலை 3.30 மணிக்கு அபிஷேகமும், மாலை 5.30 மணிக்கு மகா தீபாராதனையும், 6.00 மணிக்கு சுவாமி ஆலயம் வந்தடையும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்