முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தாய்மொழி தினவிழா

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம், - ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் தாய்த்திருநாட்டின் தாய்மொழியாகிய    தமிழ் மொழி தினம்    பள்ளித்தாளாளர் குமரேசன் தலைமையில் பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி அரவிந்த் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பள்ளி மேனேஜிங் டிரஸ்டி. சித்ராகுமரேசன்;, உதவி மேலதிகாரி சுந்தரேசன்   பள்ளி ஒருங்கிணைப்பாளர் அமுதா ஆகியோர்  கலந்து கொண்டனர். மாணவி கௌரிமகாலட்சுமி  அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.  ஐந்தாம் வகுப்பு மாணவி..நேத்ரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  மாணவி சாஸ்வீனா  தாய்மொழியாகிய  தமிழ் மொழியின் சிறப்புகளையும் பெருமைகளையும் எடுத்துரைத்தார். பாலர் வகுப்பு மாணவன் ஹரிஸ் தனக்கே உரித்தான மழலைமொழியில் தமிழ் மொழியில் வீரம் செழிக்கும் அளவிற்கு உரை நிகழ்த்தி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.  தமிழ்மொழியின் வாயிலாக நாட்டுப்புற கலைகளையும்  விவசாயத்தையும் வளர்ச்சியடைவதற்கான வ

ழிமுறைகளையும்  தாய்மொழியாகிய தமிழ்மொழியின் வாயிலாக எடுத்துரைத்தவிதம் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.   மாணவச்செல்வங்களை உற்சாகப்படுத்தும் விதமாக வார்த்தை விளையாட்டு  புதிர் விளையாட்டு, பழமொழி விளையாட்டு போன்ற விளையாட்டுகளை நடத்தி பரிசுகளும் வழங்கப்பட்டன. நாட்டுப்புற கலைகளை நினைவுகூறும் வகையில் தப்பாட்டம், காவடி ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற நடனங்களை மாணவச் செல்வங்களை நிகழ்த்திக் காட்டினார்கள்.  சிறப்பு விருந்தினர் சுந்தரேசன் அவர்கள்   தாய்மொழியாகிய தமிழ் மொழியின் சிறப்பு குறித்து உரையாற்றினார். வளர்ந்து வரும்  நாகரீக   உலகில் நம்  கலாச்சாரம் அழி;ந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். தொன்மை வாய்ந்த மொழியாகிய தமிழ் மொழி அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று உரையாற்றினார்.

முடிவில் ஐந்தாம் வகுப்பு மாணவன் செல்வன். ளு. விஜயகார்த்திக் நன்றியுரையாற்றினார் ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் திருமதி. அமுதா தலைமையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஷர்மிளா, திருமதி சத்யா ஆகியோர் முன்னிலையில் அனைத்து  ஆசிரியைகளும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்