முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகமான வெப்பம்
மராட்டியம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது வெயில் அதிகமாக கொளுத்த தொடங்கிவிட்டது. டெல்லியில் 93 டிகிரிக்கு அதிகமான வெப்பம் இருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் இது வரை இல்லாத அளவுக்கு தற்போது வெயில் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் தான் இது மாதிரியான வெயில் இருந்தது.

அதிகம் இருக்கும்
இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்