முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை: சந்திரசேகரராவ் வழங்குகிறார்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

ஐதராபாத்  - தெலுங்கானா மாநிலம் உதயமானதால் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை முதல்வர் சந்திரசேகரராவ் இன்று வழங்குகிறார்.

நகை காணிக்கை
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயமானது. தனி மாநிலத்துக்காக போராடிய தெலுங்கானா ராட்டிரீய சமிதி தலைவர் சந்திரசேகரராவ் அம் மாநில முதல்வராக உள்ளார். தெலுங்கானா தனி மாநிலம் உதயமானால் திருப்பதி கோவில் ஏழுமலையானுக்கு அரசு சார்பில் ரூ.5 கோடிக்கு நகை காணிக்கை செலுத்துவதாக சந்திரசேகரராவ் வேண்டி கொண்டார்.

ஏழுமலையானை தரிசனம்
இதையடுத்து நகைகள் செய்வதற்காக ரூ.5 கோடியை திருப்பதி தேவஸ்தானத்திடம் முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார். இந்த நகைகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. நகைகளை இன்று சந்திரசேகரராவ் திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துகிறார். நேற்று மாலை 4.30 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்தினர், எம்.எல்.ஏ.க்களுடன் ரேணிகுண்டா சென்றார். பின் அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்றனர். நேற்று இரவு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினர்.  இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்து ரூ.5 கோடி நகையை காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்