முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோயிலில் மகாசிவராத்திரி திருவிழா: சுவாமி,அம்மன் தங்க,வெள்ளி வாகனங்களில் வீதியுலா

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,பிப்,22:   ராமேசுவரம் திருக்கோயிலில் மகாசிவாராத்திரி திருவிழா நடைபெற்று வருவதை முன்னிட்டு  சுவாமி,அம்மன் தங்க,வெள்ளி வாகனங்களில் அலங்காரத்துடன் எழுந்தருளி நான்கு ரத வீதியில் உலா  வந்து  பக்தர்களுக்கு திங்கள் கிழமை இரவு காட்சியளித்து அருள் பாளித்தன.

 ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மகாசிவராத்திரி  திருவிழா பிப்ரவரி 17 ஆம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ராமநாதசுவாமி, ,பர்வதவர்த்தினி அம்மன் அலங்காரத்துடன் தினசரி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றன. . இதனையொட்டி நான்காம் நாள் திருவிழாவை முன்னி்ட்டு திங்கள் கிழமை மாலையில் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் நடைபெற்றன.அதன் பின்னர் இரவு 8 மணியளவில் அலங்காரத்துடன் திருக்கோயிலிருந்து  ராமநாதசுவாமி மற்றும் பிரியாவிடை வெள்ளி கைலாச வாதனத்திலும், பர்வதவர்த்தின் அம்மன் தங்க சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி   நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து  அருள்பாலித்தன. வீதியுலாவில் திருக்கோயில் அலுவலர்களும் பக்தர்களும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago