முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      நீலகிரி

 

இளைஞர்களுக்காக தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஊட்டியில் இன்று நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

 

 

எமரால்டு கல்லூரி

 

 

ஊட்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகம் சார்பில் கல்லூரி மாணவியர்கள் மற்றும் படித்த இளைஞர்களுக்காக தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று(22_ந் தேதி) காலை 9 மணிக்கு ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

 

 

கண்காட்சி மற்றும் கருத்தரங்கு

 

 

இத்தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தொடங்கி வைக்கிறார். கருத்தரங்கிற்கு கல்லூரி தாளாளர் மோதிலால் கட்டாரியா முன்னிலை வகிக்கிறார். இதில் முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் மேஜர் சரவணன், ஐவிஸ் அகாடமி முதல்வர் பாபு, முன்னோடி வங்கி மேலாளர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்குகின்றனர். மேலும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் தொடர்பாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இவ்விழாவில் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

 

 

போட்டித் தேர்வு

 

 

இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ராணுவத்திலுள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு தேவையான விவரங்களும் மேற்கல்வி தொடர்பான விவரங்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. எனவே நீலகிரி மாவட்ட மாணவ, மாணவியர் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்