முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி சாரதா இண்டர்நேஷனல் பள்ளியில் துப்பாக்கி சுடும் போட்டி.

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      ஈரோடு

 

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தமிழ்நாடு மாணவர் ஒலிம்பிக் கழகத்தாரால் கோபி சாரதா இண்டர்நேஷனல் பள்ளியில் நடத்தப்பட்டது.

 

இப்போட்டியில் மயிலாடுதுரை இ அரியலூர இ நாமக்கல் இ திருச்சி இ கரூர்இ தஞ்சாவூர்இ நீலகிரி ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

 

 

அதில் சாரதா இண்டர்நேஷனல் பள்ளியைச் சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பல பதக்கங்களை

 

 

வென்றனர். அதில் 10 வயதிற்கு உட்படடோர் பிரிவில் இலக்கியா முழங்கால் நிலையில் தங்கப் பதக்கத்தையும் 12 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ஜனஸ்வேதா இஅபிஜித் இநந்தினி இசரண் ஆகியோர் நின்ற நிலையில் தங்கப் பதக்கத்தையும் அதே பிரிவைச் சார்ந்த ஜனஸ்வேதா முழங்கால் நிலையில் வெள்ளி பதக்கத்தையும் 13 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில சரண் படுத்த நிலையில் வெள்ளிப் பதக்கத்தையும் மற்றும் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் சஞ்சய் வெள்ளிப் பதக்கத்தையும் இ16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ரகுராம் தங்கப் பதக்கத்தையும் மேலும் அதே பிரிவைச் சார்ந்த திரிவிக்ரம்இ ரகுராம் நின்ற நிலையிலும்இபடுத்த நிலையிலும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். மேலும் மாவட்ட வாரியாக முதல் பரிசை நாமக்கல் மாவட்டமும் இரண்டாவது பரிசை ஈரோடு மாவட்டமும் வென்றது.

 

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தமிழ்நாடு அரசு மாணவர் ஒலிம்பிக் கழகச் செயலர் எஸ். சரண்யா இ கோபி

காவல்துறை ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் இ மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன்இஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் பள்ளியின் செயலர் சீதாலட்சுமி மாணவ மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்