முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

  தேனி - பெரியகுளம் அருகே எண்டப்புளி புதுப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைபள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தலைமையாசிரியர் உத்தண்டலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கதிர்காமு முன்னிலை வகித்தார். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் 44 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது தமிழக பட்ஜெட்டில் பள்ளி மற்றும் உயர்கல்விக்கென்று சுமார் 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியிலிருந்து பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட்டுபுத்தகங்கள், பேக், ஜாமண்ட்டிரி பாக்ஸ், அட்;;;;;லஸ், சீரூடைகள், காலணி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் சுமார் 1 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்படுகிறது. உலக அறிவை வளர்த்து கொள்ள வேண்டுமென்று 16 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி வழங்கப்படுகிறது. 12ம் வகுப்பு வரை இடை நிற்றல் இல்லாமல் பயின்றால் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இவ்வளவு வசதிகளையும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு செய்து கொடுத்து வருகின்றது. மேலும் அவர் பேசும்போது நான் பயின்ற பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்ற பொழுது முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் பேசும்போது நான் படிக்கின்ற காலத்தில் சந்தோஷத்தை இழந்ததால் தற்போது என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார். எனவே மாணவர்கள் படிக்கின்ற வயதில் அரட்டை அடிப்பது, ஜாலியாக சுற்றுவது டிவி பார்ப்பது, செல்போனில் மூழ்குவது என சின்ன சின்ன சந்தோஷங்களை இழந்து வகுப்பறையில் ஆசிரியர்கள்

கற்றுத்தரும் பாடங்களை கவனமாக படித்தால் வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைந்து வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றார். உதவி தலைமையாசிரியர் மகுடீஸ்வரி நன்றி கூறினார். இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரவிச்சந்திரன்,  ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், எண்டப்புளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஒ.ராமசாமி, தேவதானபட்டி பி.ஆர்.ராஜேந்திரன், எண்டப்புளி கிளை செயலாளர் தவசி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago