திட்டப்பணிகள் மற்றும் பிறதுறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      கடலூர்

கடலுார்,

கலெக்டர் டி.பி.ராஜேஷ்  தலைமையில் இருபது அம்சத்திட்டம், திட்டப்பணிகள் மற்றும் பிறதுறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்    கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.ட்டத்தில் கடலூர்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர்  துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டார். 2016-17-ம் நிதியாண்டில் நிலுவையிலுள்ள பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரையும் நிலுவையிலுள்ள பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.மேலும், துறை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்துப் பணிகளையும் 28.02.2017-க்குள் முடிக்க வேண்டுமென கலெக்டர்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.ஆனந்தராஜ், நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பிறதுறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: