முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணி கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர், காணை ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேன்மைமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சீமைக் கருவேல் மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பாக வருவாய்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, கால்நடை பராமரிப்புத்துறை, இந்து அறநிலையத்துறை மற்றும் சமூக வனத்துறை ஆகிவற்றிற்கு சொந்தமான இடங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற கலெக்டர்  உத்தரவிட்டார்.இதற்கென வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் வனத்துறை அலுவலர்களைக் கொண்ட குழு மேற்குறித்த துறைகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை மதிப்பீடு செய்து வெளிப்படையான ஏலம் விட்டு உள்ளாட்சி அமைப்புகளில் எவ்வித செலவினமும் மேற்கொள்ளாமல், அரசுக்கு வருவாய் ஈட்டத்தக்க வகையில் அரசு விதிமுறைகளின்படி 27.02.2017க்குள் சீமைக் கருவேல் மரங்களை முற்றிலும் அகற்றிடவும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமை கருவேல் மரங்களையும் இட உரிமையாளர்களை கொண்டு முற்றிலும் அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர்  உத்தரவிட்டார்.அதன்படி, இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.  கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் மாதிரி மங்கலம், பொன்னேரி ஊராட்சி, காணை ஊராட்சி ஒன்றியம் வெங்கந்தூர் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள ஏரிகள், நீர்வரத்து வாய்க்கால்கள் மற்றும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியினை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்