முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவலூர்பேட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்த்தாத்தா உ.வே.சா பிறந்த தின விழா

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      விழுப்புரம்

செஞ்சி,

அவலூர்பேட்டையில் தமிழ்ச்சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் 163 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.உ.வே.சா அவர்களின் உருவப்படத்தை அவலூர்பேட்டை அங்காடி வீதியில் உள்ள முத்தாலம்மன் கோயிலின் முன்வைத்து காலை 10.30 மணிக்கு தமிழ்சங்கத்தலைவர் புருஷோத்தமன் தலைமையில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. தமிழ் சங்க ஆலோசகர் ஏழுமலை வரவேற்று நிழ்ச்சியைத் தொகுத்தளித்தார். தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், சின்ராஜ், அண்ணாமலை, வள்ளலார் சங்க உறுப்பினர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், இயற்கை ஆர்வலர்கள்,ஆன்மீக அன்பர்கள், மற்றும் பொது மக்கள் சுற்றுப்புற கிராமத்தினர் மகளிர்,சிறுவர்,சிறுமியர் திரளாகக் கலந்து கொண்டனர். தமிழ்ச்சங்க தலைவர், பொருளர் தட்சணாமூர்த்தி, துணைச் செயலர் சிவநேசன், ஆகியோர் உ.வே.சா பற்றி சிறப்புறை ஆற்றும்போது அன்னாரின் வாழ்க்கை வரலாறு, தமிழுக்கு ஆற்றிய தொண்டு, ஓலைச்சுவடிகளை தேடியலைந்து அச்சேற்றியது மற்றும் பெற்ற பதவிகள் பட்டங்கள் பற்றி விளக்கி உறையாற்றினர். சிதம்பரநாதன் உ.வே.சா பற்றி இசையுடன் பாடல் பாடினார். இன் நிகழ்வில் 10 ஆம் வகுப்பில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவன் ஹரீஷுக்கு ரூ1500 ஐ, சரவணா நகை அங்காடி பாலமுருகன் பரிசாக வழங்கினார்.  மகாராஜன், செவராஜ் ஆகியோர் அனைவருக்கும் இனிப்புகளைவழங்கினார்.கல்வியாளர் தன்ராஜ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்