முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் மு.ஆசியா மரியம் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல்.

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் கந்தசாமி கண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமூக பாதுகாப்புத்துறையின் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அரசு குழந்தை கொள்கை வரைவில் குழந்தைகள் பங்கேற்பு தொடர்பாக கலந்தாய்வு மற்றும் விழிப்புணர்வுக்கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம்   தலைமையேற்று கூட்டத்தினை துவக்கி வைத்து பேசும்போது தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு மாவட்ட அளவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அமைக்கப்பட்டு கலெக்டர்  தலைமையில் செயல்பட்டு வருகின்றது. இதன் முக்கிய அம்சம் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்களை தடுத்தல், கொடுமைக்குட்படும் சூழ்நிலைகளிலிருந்து குழந்தைகளை மீட்டல், வன்முறைக்கும், வன்கொடுமைக்கும் இரையாகும் குழந்தைகளின் மறுவாழ்வினை உறுதி செய்தல் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய தகவல்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மேற்கொண்டு வருகின்றது. அவ்வாறு பல்வேறு சூழ்நிலைகளிலிருந்து மீட்கப்படுகின்ற குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பும்  வாழ்க்கையின் வளர்ச்சிக்கு தேவையான கல்வி அறிவு உள்ளிட்ட வசதிகளும், பிற உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே குழந்தைகள் தங்களுக்கு ஏதேனும் உரிமை மீறல்கள் இருந்தாலோ, அல்லது கொடுமைக்குட்படும் சூழல் இருந்தாலோ அல்லது வன்முறை, வன்கொடுமைக்கு இரையாகும் நிலை ஏற்பட நேர்ந்தாலோ உடனடியாக 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பிற்கான சைல்டு லைன் எண்ணை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியம் காக்கப்படும். அத்தோடு, பாதிப்புள்ளாகின்ற குழந்தைகளை உடனடியாக மீட்டு உரிய பாதுகாப்பை வழங்கிடவும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தயாராக உள்ளது. எனவே பொதுமக்கள் இதுகுறித்த விழிப்புணர்வை பெறுவதோடு, குழந்தைகளுக்கான விதிமீறல்கள் அல்லது கொடுமைகள் ஏற்பட்டால் உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம்  பேசினார்.  இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு  வரவேற்புரையாற்றினார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ச.கோபிதாஸ், நாமக்கல் மாவட்ட இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் தில்லை சிவக்குமார், கந்தசாமி கண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலக்குழும உறுப்பினர் ஜெயபால் சுந்தர் சிங், வேர்டு தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் தினகரன் ஆகியோர் குழந்தைகளின் உரிமைகள் குறித்து விளக்கவுரையாற்றினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜெயந்தி  நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்