முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரையூர் வட்டம், ஜம்பலபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.-  மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், ஜம்பலபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில்  நடைபெற்றது.
  இம்மனுநீதி நாள் முகாமில் ரூ.30,52,000 மதிப்பில் 226 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி  வருவாய்துறை அமைச்சர்  பேசும்போது தெரிவித்ததாவது:-

சேடபட்டி ஒன்றிய பகுதிகளில் முதன்முறையாக அனைத்து துறைகளின் அலுவலர்களையும் ஒருங்கிணைக்கும் முகாம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். மக்கள்தொடர்பு முகாமானது அனைத்து முகாம்களுக்கும் ஒரு வழிகாட்டி முகாமாக திகழ்கிறது. இதுதவிர, மக்கள் குறைதீர்க்கும் முகாம், அம்மா திட்ட முகாம் போன்றவற்றின் மூலம் 33 துறைகளிலிருந்தும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களில் வாழும் கடைகோடி மக்களுக்கும் அதிகமான அரசு சேவைகளை உறுதிப்படுத்தும் வகையில் அம்மா திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெற்று உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கும்பொருட்டு, 1 ஏக்கருக்கு ரூ.5,465 வீதம் மொத்தம் ரூ.2,247 கோடி மதிப்பில் 32 இலட்சம் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

 இம்மனுநீதி நாள் முகாமில், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் 101 நபர்களுக்கும், இலவச வீட்டுமனைப் பட்டா 5 நபர்களுக்கும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரண உதவித்தொகை 7 நபருக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் 3 நபர்களுக்கும், புதிய குடும்ப அட்டை 100 நபர்களுக்கும், வேளாண்மைத்துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் 40 சதவிகித மானியத்தில் 10 நபர்களுக்கும் என மொத்தம் 226 பயனாளிகளுக்கு ரூ.30,52,000 மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வருவாய்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர்   பேசும்போது தெரிவித்ததாவது:-

கிராமப்புறங்களில் நடைபெறும் இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் 15 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நடமாடும் வாகனம்(ஆழடிடைந ஏயn) மூலம் நேரடியாகவே சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தடையின்றி கிடைப்பதற்கு அதிகஅளவில் போர்வெல்கள் அமைக்கவும், சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் வேருடன் அகற்றுவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடைகளுக்கு தீவனங்கள் அளிப்பதற்கு 10 டிப்போக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மூலம் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாமில் ஒன்பது மாதம் முதல் பதினைந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என தெரிவித்தார். 
  இம்முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலத்துறை, சுகாதாரத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு துறைசார்ந்த உயர் அலுவலர்களால் விரிவாக விளக்கமளித்தும், திட்டங்கள் குறித்த விபரம் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
     இம்முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.இராஜன் செல்லப்பா(மதுரை வடக்கு), ஏ.கே.போஸ்(திருப்பரங்குன்றம்), பி.பெரியபுள்ளான்(மேலூர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக, உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா வரவேற்புரையாற்றினார். முடிவில் பேரையூர் வட்டாட்சியர் சிவக்குமார் நன்றி கூறினார். இம்முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago