முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் இன்று 4-ம் கட்ட தேர்தல் 53 தொகுதிகளில் வாக்குப்பதிவு

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

 லக்னோ - உத்தரப் பிரதேசத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 53 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று  4-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதை யொட்டி அந்த தொகுதிகளில் நடந்து வந்த தீவிர தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது.

 680 வேட்பாளர்கள்
உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கெனவே 3 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 4-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று  நடைபெறுகிறது. இதில் 680 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

1.84 கோடி வாக்காளர்கள்
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் நாடாளுமன்ற தொகுதியான ரேபரேலி உட்பட பிரதாப்கர், கவுஷாம்பி, அலகாபாத், ஜலாவுன், ஜான்சி, லலித்பூர், பண்டா, ஹமிர்பூர், சித்ரகூட், பத்தேபூர் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள 53 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 1.84 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கடந்த 2012-ல் நடந்த தேர்தலின்போது மொத்தம் உள்ள 53 தொகுதிகளில் சமாஜ்வாதி 24, பாஜக 5, பகுஜன்சமாஜ் 15, காங்கிரஸ் 6, பிற கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரியின் மகள் ஆராதனா மிஸ்ரா, அமைச்சர் ரகுராஜ் பிரதாப் சிங் என்கிற ராஜா பையா உள்ளிட்டோர் நட்சத்திர வேட்பாளர்களாக களமிறங்கி யுள்ளனர். சோனியாவின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அதிதி சிங் போட்டி யிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்