முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.5.5 கோடியில் தங்க நகைகள் காணிக்கை ஏழுமலையானுக்கு சந்திரசேகர ராவ் செலுத்தினார்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி  - திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி மதிப்பில் தங்க நகைகளைக் காணிக்கையாக செலுத்துவதற்காக 17 ஆண்டுகளுக்குப் பின் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று திருமலைக்கு வந்தார்.  ஆந்திராவில் இருந்து தனித் தெலங்கானா உருவானால் திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்தி கடன் செலுத்துவதாக கே.சந்திரசேகர ராவ் பிரார்த்தித்து கொண்டார். அண்மையில் தெலங் கானா உருவானதை அடுத்து தனது நேர்த்திக் கடனைச் செலுத்த அவர் முடிவு எடுத்தார். இதற்காக தனது குடும்பத்தினர், அமைச்சர் கள் என 56 பேருடன்  அவர் தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார்.

வரவேற்பு :
17 ஆண்டுகளுக்குப் பின் அவர் திருமலைக்கு வந்ததால், ஆந்திர வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி, ஐஜி பிரபாகர், திருப்பதி எஸ்பி ஜெயலட்சுமி மற்றும் பிற உயரதிகாரிகள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அனைவரும் திருமலைக்குச் சென்றனர். அவர்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி, தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் ஆகியோர் வரவேற்றனர். 

காணிக்கை :
இதைத் தொடர்ந்து  திருமலையில் உள்ள விடுதி யில் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுத்தார். நேற்று காலை குடும்பத்தினருடன் ஏழுமலை யானைத் தரிசித்த அவர், ரூ.5.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை காணிக்கையாக வழங்கி நேர்த்தி கடன் செலுத்தினார். அதன்பின் திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்த பின், தனி விமானம் மூலம் மீண்டும் ஹைதரா பாத் புறப்பட்டுச் சென்றார். கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஏழுமலையானுக்கு சாலகிராம ஹாரம் சார்த்தப்பட்டது. அந்த வகையான சாலகிராம ஹாரம், மகர ஹாரம் ஆகியவற்றை சந்திரசேகர ராவ் காணிக்கையாக வழங்கினார். தமிழகத்தின் கோவையில் உள்ள கீர்த்திலால் காளிதாஸ் நிறுவனம் இந்த நகைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்