முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழக்கரை கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- கீழக்கரை மகளிர் கல்லூhயில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் இளைஞர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் புத்தகக் கண்காட்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டு, தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கினைத் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தொழில்நெறி வழிகாட்டுவதற்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.  அதனடிப்படையில் கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில், ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வங்கி தேர்வுகள், காவல்துறை, இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்து விதமான அரசு பணியிடத்திற்கான தேர்வுகளுக்கு மாணவ, மாணவியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள தேவையான பயிற்சி புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளைத் தேர்ந்தெடுத்து அத்துறையில் தங்களது திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்ளவும், முழுமையாக வெளிப்படுத்திடவும் வேண்டும். மாணவ, மாணவியர்கள் அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்கள் குறித்த தகவல்களையும்;, வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் புதிய தொழில் முனைவோருக்கான பல்வேறு கடனுதவிகள் குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ள இக்கருத்தரங்கு நல்லதொரு வாய்ப்பாக  அமைகின்றது.  கல்வி கற்றல் என்பது கல்லூரி படிப்போடு நின்று விடுவதல்ல. இளைஞர்கள் தொடர்ந்து பல்வேறு புதுமையான விஷயங்களைக் கற்றறிந்து ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களில் தங்களை ஈடுபடுத்தி வளமான சமுதாயத்தினை ஏற்படுத்திடும் வகையில் செயல்பட வேண்டும். பேசினார்.
 இக்கருத்தரங்கில் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள் பங்கேற்று சுயதொழில் மற்றும் கடனுதவிகள் குறித்து முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் கேப்டன்.சி.விஜயகுமார் அவர்கள் பங்கேற்று இராணுவத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும், தாட்கோ மேலாளர் செல்வராஜ் பங்கேற்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான சுய தொழில் மற்றும் அரசு கடனுதவிகள் குறித்தும், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர் எஸ்.பாவாஜி பங்கேற்று போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ளும்; முறைகள் குறித்தும் உரையாற்றினார்கள். முன்னதாக கல்லூரியின் சார்பாக நடத்தப்பட்ட பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து பாண்டிச்சேரியில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்ற மாணவிகளையும் கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மு.அ.அபுபக்கர் சித்திக், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, தாசீம்பீவி அப்துல்காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர்.எஸ்.சுமையா உள்பட அரசு அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்