முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. அலுவலகத்தில் ரஷிய தூதர் திடீர் மரணம்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க் -  ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் விட்டாலி சுர்கின்  தனது ஐ.நா அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, திடீரென மரணம் அடைந்தார்.  விட்டாலி சுர்கினுக்கு நேற்று 65-வது பிறந்த நாளாகும். இந்நிலையில் பிறந்த நாளுக்கு ஒருநாள் முன்னதாக இத்துயர சம்பவம் நிகழ்ந்தது. ரஷிய தூதர கப் பணியில் சுர்கின் 40 ஆண்டு களுக்கும் மேலாக இருந்து வருகிறார். இதில் பெல்ஜியம், கனடா ஆகிய நாடுகளில் அவர் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அவரது மறைவு குறித்து ரஷிய தூதரகம் விடுத்துள்ள செய்தியில், “தூதரக ஊழியர் கள் மற்றும் அவரது சிறப்பான தலைமையின் கீழ் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த அனைவரை யும் இது அதிர்ச்சி அடையச் செய் துள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. சுர்கின் மறைவுக்கு ஐ.நா. பொதுச்சபை தலைவர் பீட்டர் தாம்சன் இரங்கல் தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நெருங்கிய நண்பரான சுர்கினின் திடீர் மறைவு குறித்த செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். ரஷிய கூட்டமைப்பும் ஐ.நா.வும் உண்மையான மகன் ஒரு வரையும் சர்வதேச நிபுணரையும் இழந்துவிட்டது” என்று கூறியுள்ளார். சுர்கின் எதனால் இறந்தார் என ரஷிய தூதரகம் அறிவிக்க வில்லை. என்றாலும் அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்