முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத சகிப்புதன்மைக்கு ஆதரவாக ட்ரம்பின் மகள் இவன்கா அழைப்பு

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - யூத சமூகத்துக்கு எதிராக அச்சுறுத்தல் தொடர்வதையடுத்து மத சகிப்புதன்மைக்கு ஆதரவாக ட்ரம்பின் மூத்த மகளான இவன்கா ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இவன்கா ட்ரம்ப்  பதிவிட்ட மத சகிப்புதன்மை பற்றிய ட்வீட்தான் அமெரிக்க மக்களிடையே தற்போதைய விவாத பொருளாக மாறியுள்ளது.  இவன்கா ட்ரம்பின் கணவரான ஜார்ட் குஷ்னர் யூத மதத்தைச் சேர்ந்தவர். திருமணத்தின்போது இவன்கா ட்ரம்ப் யூத மதத்துக்கு மாறியவர். இவன்கா ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் பெண் வர்த்தக சபை உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு தனது பங்களிப்பை அளித்திருக்கிறார்.

திங்கட்கிழமை உலக நாடுகளின் 11 வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட குண்டு வெடிப்புகள் யூத மதத்துக்கு எதிரான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றில் யூத எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மதசகிப்புதன்மைக்கு ஆதரவாக இவன்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்க என்ற நாடு மத சகிப்புதன்மையால் உருவானது. நாம் நமது இல்லத்தை வழிபாடுகள் மற்றும் மத மையங்களால் பாதுகாக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். யூத மத பகைமையால், இவன்கா ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதால்தான் இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்று இவன்கா ட்ரம்புக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏன் கண்டனங்கள் தெரிவிக்கவில்லை என்று இ-மெயில்கள் குவிந்தன. இதற்கு ட்ரம்ப் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படாமல் இருந்தது. ட்ரம்ப் தலைமையிலான அரசு யூத பகைமைக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த வாரம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ட்ரம்ப்பிடம் யூத பத்திரிக்கை ஒன்று, "அதிகரித்து வரும் யூத பகைமையை எதிர்கொள்ள அரசு என்ன திட்டமிட்டுள்ளது?" என்று கேள்வி எழுப்பியதற்கு ட்ரம்ப் கோபமாக, "உலகிலேயே குறைந்த  அளவில் யூத எதிர்ப்புக் கொண்ட நபர் நான்தான்" என்று பதில் கூறினார். இந்த நிலையில் இவன்கா ட்ரம்ப் மத சகிப்புதன்மைக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago