முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் சாரண தந்தை பிறந்தநாள் பேரணி

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலையில் சாரண தந்தை கேப்டன் பவுல் பிறந்த நாள் சிந்தனைநாள் பேரணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் நேற்று கொடியசைத்து துவக்கிவைத்தார். திருவண்ணாமலை வட்டாட்சியர் வளாகத்திலிருந்து சாரண தந்தை கேப்டன் பவுல் அவர்களின் பிறந்த நாளை சிந்தனை நாளாக கொண்டாடப்படுவதையட்டி சிந்தனை நாள் பேரணியை நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த பேரணி பெரியார் சிலை, அண்ணா சிலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியை சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சாரண சாரணிய இயக்க ஒருங்கிணைப்பாளர் பியூலா கரோலின், தாசில்தார் எஸ்.ரவி, மாவட்ட ஆணையர் ஆர்.ஏ.பரிமளா, சாரண அமைப்பாளர் ஆர்.லிங்கப்பன், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாவட்ட முழுவதிலுமிருந்து சாரண சாரணிய இயக்கத்தின் மாணவ மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பு ஆணையர் எம்.தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago