ஜவ்வாதுமலையில் மனுநீதிநாள் முகாம்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் நேற்று நடந்த மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 13 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார். தி.மலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை - ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் கலசபாக்கம், செங்கம், போளூர் ஆகிய 3 வட்டங்கள் உள்ளன. இதில் ஜவ்வாதுமலையிலுள்ள நம்மியம்பட்டு, கோவிலூர், பட்டறைகாடு, தும்பக்காடு உள்பட பல்வேறு மலைக்கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மலை கிராமங்களில் நடந்த மனுநீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள் பேருந்தில் பயணம் செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிலையில் 3வது முறையாக ஜவ்வாதுமலையிலுள்ள வனத்துறை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது. இதையட்டி தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஜவ்வாதுமலைக்கு பேருந்தில் சென்றனர். அவர்களுடன் வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ப.சுப்பிரமணியன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோரும் சென்றனர். மனுநீதிநாள் முகாமில் 17,271 பயனாளிகளுக்கு ரூ. 13 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

 

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: