முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு 15,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொள்முதல்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு 15 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  டெல்லி மாநகராட்சிக்கு வரும் ஏப்ரல் மாதம் மத்தியில் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் வரும் மார்ச் மாதம் முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. இதற்காக வார்டுகள் மாற்றி அமைக்கும் பணி, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகளில் டெல்லி அரசும் தேர்தல் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொள்முதல் செய்யப்பட்டுள்ள ஓட்டுப்திவு இயந்திரங்களை பொறியாளர்கள் சோதனை செய்வார்கள். அதற்கு பிறகுதான் அவைகளை பயன்படுத்துவோம் என்றும் தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முறைப்படி வரும் ஏப்ரல் 27-ம் தேதிக்குள் டெல்லி மாநகராட்சி தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் முடித்துவிட வேண்டும். ஆனால் வார்டுகள் மாற்றி அமைப்பது தொடர்பாக பணிகள் இருப்பதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆம்  ஆத்மி கட்சி மீது காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. டெல்லியில் தெற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய 3 மாநகராட்சிகளில் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகள் மாற்றி அமைக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சில சட்டசபை தொகுதிகளில் 3 முதல் 6 வார்டுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago