முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம்.

விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக 2016-17ஆம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதையொட்டி, கலெக்டர்இல.சுப்பிரமணியன்  தலைமையில், கலெக்டர்அலுவலக கூட்டரங்கில்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.விழுப்புரம் மாவட்டத்தில் 2016-17ஆம் ஆண்டு அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.  அரசு பொதுத் தேர்வினை முன்னிட்டு, காவல்துறையின் மூலமாக வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்கள் 11, வினாத்தாள் சேகரிப்பு மையங்கள் 3 (பத்தாம் வகுப்பு), 3 (பன்னிரண்டாம் வகுப்பு), மற்றும் 112 பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மையங்கள், 170 பத்தாம் வகுப்பு தேர்வு மைங்கள், மற்றும் 34 பன்னிரண்டாம் வகுப்பு வினாத்தாள் எடுத்துச் செல்லும் வழித்தடங்கள், 36 பத்தாம் வகுப்பு வினாத்தாள் எடுத்துச் செல்லும் வழித்தடங்கள் ஆகிய இடங்களுக்கு ஆயுதம் தாங்கி காவல்துறை பாதுகாப்பு அளித்தல் வேண்டும்.மாவட்ட காவல்துறையினரால், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாட்கள் எடுத்துச் செல்வதை உறுதி செய்து, தேர்வு மையங்களில் எந்தவித புகார்களுக்கும் இடமின்றி தேர்வர்கள் தேர்வெழுத உரிய பணியாளர்களை நியமனம் செய்து அனைத்து தேர்வுப் பணிகளையும் தேர்வுத்துறையின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளுதல் வேண்டும் எனவும்,மின்சார வாரியத்தின் மூலம் அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேர்வு நாட்களில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.  போக்குவரத்துத்துறையின் மூலம் தேர்வு நாட்களில் மாணவர்கள் உரிய நேரத்தில் தேர்வு மைங்களுக்குச் சென்றடைய உரிய போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தர வேண்டும் மற்றும்தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூலம் மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள் சேகரித்து வைக்கும் இடமான, திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் இராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் தீயணைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 170 தேர்வு மையங்களில், 47715 மாணவ மாணவியர்களும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 112 மைங்களில் 42066 மாணவ மாணவியர்களும் தேர்வு எழுத உள்ளனர். மார்ச் 2ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், அரசு பொதுத் தேர்வுகள் வழக்கம்போல் அந்தந்த தேர்வு மையங்களில் நடைபெறும் என கலெக்டர்இல.சுப்பிரமணியன்  தெரிவித்தார்.இக்கூட்டத்தில், திண்டிவனம் சார் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ், காவல்துறை துணை கண்காணிப்பாளர் .அனுசுயாடெய்சிஎர்ணஸ்ட் மற்றும் வருவாய்த்துறை, கல்வித்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago