சிதம்பரத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டார்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      கடலூர்

சிதம்பரம்,பிப்.23-

சிதம்பரம் சட்டமன்ற அலுவலகத்தில் இன்று சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பெற்றுக் கொண்டார். பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களில் முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை வேண்டுதல், திருமண உதவி திட்டம் போன்ற கோரிக்கைகளை மனுவாக சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கினர். மனுக்களை கனிவோடு பெற்றுக் கொண்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் உடனடியாக தீர்வு கானவும் சம்பந்த பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆவன செய்வதாக உறுதி அளித்தார். சட்டமன்ற உறுப்பினரிடம் மனுக்களை வழங்கிய பொது மக்கள் தங்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார்,சிதம்பரம் நகர கழக செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய கழக செயலாலர் அசோகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: