முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஷ்கோடியில் 53 ஆண்டுகளுக்கு பின்பு அஞ்சலகதுறையின் புதிய கிளை அலுவலகம் திறப்பு.

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,-  தனுஷ்கோடி பகுதியில் மீனவர்களின் நலன் கருதி 53 ஆண்டு களுக்கு பின்பு அஞ்சல் துறை தனது புதிய கிளையை அப்பகுதியில் நேற்று திறந்துள்ளது.
 ராமேசுவரம் பகுதியிலிருந்து 22 கி.மீ தொலை தூரத்தில் கடந்த 1964 ஆண்டு வரை இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரமாக விளங்கி வந்த தனஷ்கோடி பகுதி அமைந்துள்ளது.இப்பகுதி கடந்த 1964 ஆம் ஆண்டு பெரும் புயலால் அழிந்து போனது.இந்த புயலில் தலைமை அலுவலகமாக இயங்கி வந்த அஞ்சல் துறை அலுவலகவுமும் புயலில் சிக்கி சேதமடைந்தது.அப்பகுதியில் போக்கு வரத்து வசதிகளும் இல்லாததால்  அப்பகுதியில் தொடர்ந்து அஞ்சல்துறை தனது சேவையை நிறுத்திவிட்டது.இதனை தொடர்ந்து தனுஷ்கோடி பகுதியில் மத்திய அரசு தற்போது பல கோடி மதிப்பில் சாலை வசதிகள் ஏற்படுத்தியுள்ளது.மேலும் புயலில் சிக்கி சேதமடைந்த அரசுக்கு சொந்தமான பழமையான கட்டிடங்களை புதுப்பித்து வரலாற்று சிறப்பு மிக்க நினைவு சின்னமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.இதனையொட்டி அப்பகுதியில் அஞ்சல்துறை நிர்வாகம் தனது சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்து வந்தது.அதன் பேரில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று அஞ்சல்துறையின் புதிய கிளையின் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலக திறப்பு விழாவிற்கு அஞ்சல் துறையின் கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் தலைமை வகித்தார். தனுஷ்கோடி பகுதியில் புயலுக்கு  முன்னதாக அஞ்சல்துறையில் பணியாற்ற தற்போது ஓய்வு பெற்ற அஞ்சல்துறை அலுவலர் குருசாமி முன்னிலை வகித்தார்.  ராமேசுவரம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சுடலை குத்துவிளக்கு ஏற்றி அஞ்சலக கிளையின் அலுவலகத்தை திறந்துவைத்தார்.இந்நிகழ்ச்சியில் தனுஷ்கோடி பகுதியின் மீனவ சங்க தலைவர் செல்லத்துறை சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காண முதல் படிவத்தை அப்பகுதி மீனவ பெண்களிடம் வழங்கி பின்னர் படிவ விநியோகத்தை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ராமேசுவரம் அஞ்சல்துறையின் தலைமை அலுவலர் நாகராஜன்,முன்னாள் தலைமை அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்