முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி திட்டம் 12 வது சுற்று முகாமிற்கான சார்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்:கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்டம், கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் கால் மற்றும் வாய் நோய் (கோமாரி) தடுப்பூசி 12வது சுற்று முகாமிற்கான மாவட்ட அளவிலான துறை சார்ந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலெக்டர் கே. விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறையும் ஒருங்கிணைந்து இம்முகாமினை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது :- நமது மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் தங்கள் பகுதியில் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளும் போது கால்நடை பராமரிப்புத் துறைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், பி.மல்லாபுரம் பேரூராட்சி செயல் அலுவலருக்கும் உரிய அறிவுரை வழங்கினார். பின்னர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தடுப்பூசி பணிகளுக்கு கால்நடை மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பண்டஹள்ளி பகுதியில் உள்ள சுயஉதவிக்குழு உறுப்பினர்களை அறிவுறுத்தினார்.

 

 

அதேபோல் உணவுப் பாதுகாப்பு அலுவலர் தனியார் பால்பண்ணை உரிமையாளர்களுக்கு தடுப்பூசிகள் போட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கோமாரி நோய் தடுப்பூசி குறித்த விளம்பரப் படம் ஒளிபரப்ப வேண்டுமெனவும், மேலும் அகில இந்திய வானொலி நிலையத்தின் மூலம் 12 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் குறித்த விளம்பரம் வெளியிடப்பட வேண்டுமெனவும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் பயனாளிகள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட ஏதுவாக தங்கள் பகுதிகளில் தடுப்பூசி போடும் நாளில் இரண்டு மணி நேரம் முற்பகல் அனுமதி வழங்கவும் பணித்தள பொறுப்பாளருக்கு அறிவுரை வழங்க வேண்டுமெனவும், கோமாரி நோய் தடுப்பூசி முகாமிற்கான ஊராட்சி ஒன்றிய வாகனங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் குறித்த துண்டு பிரசுரங்களை ஊராட்சி அலுவலகத்திலும் பால் கூட்டுறவு சங்கங்களிலும் ஒட்டி விளம்பரப்படுத்த வேண்டும். துணைபதிவாளர் (பால்வளம்) மூலம் துண்டுப் பிரசுரங்களை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் மற்றும் நியாய விலைக் கடைகளிலும் விளம்பரப்படுத்தவும், மேலும் இக்கூட்டத்தில் 23 ஆம் தேதி இம்முகாமிற்காக நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபாவில் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்;புணர்வு ஏற்படுத்த அலுவலர்களுக்கு ஆணையிட்டார். மேலும், கால்நடை பராமரிப்புத் துறையினர் இதர துறையினர்களோடு ஒருங்கிணைந்து நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ள வேண்டுமெனவும், இதன் மூலம் 3,59,100 பசு மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும் என்றும் இதை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார். இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர்.நா.சீனிவாசன் உதவி இயக்குநர்கள் டாக்டர்.சி.இளங்கோவன், டாக்டர்.வில்வம், டாக்டர்.ஆர்.சுகுமார், டாக்டர்.சுப்பிரமணி, டாக்டர்.ராதாகிருஷ்ணன், டாக்டர்.இராமகிருஷ்ணன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர்.ஆர்.எஸ்.டி.பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் எம்.காளிதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், புதுவாழ்வு திட்ட அலுவலர், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களும் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்