முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான் ஜெயலலலிதாபிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் பேச்சு

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      சேலம்
Image Unavailable

அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான் என சேலத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆவோசனைக் கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் பேசியுள்ளார். அ தி மு க . பொது செயலாளரும் , முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 69 -வது பிறந்த நாள் விழா எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது... சேலம் மாநகர் மாவட்ட கழகம் மற்றும் சேலம் மாநகர் புரட்சி தலைவி அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு மாநகர அவைதலைவர் வி.பன்னீர்செல்வம் எம்.பி. தலைமை வகித்தார். இதில் மாநகர் மாவட்ட செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார்... அப்போது அவர் பேசுகையில்.அதிமுகவில் தற்போது சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இதை பற்றி அதிமுகவினர் கவலைவட தேவையில்லை.விரைவி நம்மைவிட்டு சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்ந்துவிடுவார்கள். திமுகவைவிட்டு எம்.ஜி.ஆர்.நீக்கப்பட்டபோது அவர் அதிமுகவை ஆரம்பித்தபோது திமுக தீய சக்தி என்றார். அவர் இருந்த வரை திமுகவை ஆட்சி செய்யவிடவில்லை .அதே போல் ஜெயயலலிதா அதிமுகவை மீட்டெடுத்தபோதும் அவரும் திமுகவை தீய சக்தி என்றுதான் கூறினார். தற்போது அதிமுக ஆட்சியை அகற்ற முயற்சி செய்கின்றனர்.கருணாநிதியைவிட ஸ்டாலின் மிக மோசமானவர். நமக்கு தற்போதைய முதல் எதிரியும்,ஒரே எதிரி திமுகதான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிறது.எம்.ஜி.ஆரின் 100 வது ஆண்டு விழாவும் நடைபெறுகிறது. அப்போது சேலத்திலுள்ள அறுபது வட்ட கழக பகுதிகளிலும் ஏழை எளியவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்குதல், கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கியும் கோலாகலமாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்..இந்த கூட்டத்தில் சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன்,பகுதி கழக செயலாளர்கள் யாதவமூர்த்தி,தியாகராஜன்,சரவணன்,ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணமணி,எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் அசோக்குமார்,எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து,நகர கூட்டுறவு வங்கி தலைவர் எம்.துரைராஜ், சேலம் மாநகர பொருளாளர் வெங்கடாஜலம், அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சென்னகேசவன், பாசறை தலைவர் டாக்டர் சதீஷ்குமார், மீனவர் பிரிவு ராமசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் லலிதா செந்தில்குமார்,பாண்டியன், முருகேசன்,கிருபாகரன்,மதவேனா,ஏ.கே.எஸ்.எம்.பாலு,எம்.ஜி.ஆர்.மன்றஇணைச் செயலாளர் ஏ.இ.சுகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.ஆர்.ஆர்.சேகரன்,மகளிரணி கீதா, உள்பட பலர் கலந்து கொண்டனர்., கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா 69 வது பிறந்த நாள் விழாவை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் : என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்