முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான 7வது கணினி தொழில்நுட்ப கருத்தரங்கு

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியின் கணினி பொறியியல் துறையின் சார்பாக 7வது தேசிய கணினி தொழில்நுட்ப கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியின் கணினி பொறியியல் துறை சார்பாக நடைபெற்ற பால்கன்-2017 என்ற 7வது தேசிய கணினி தொழில்நுட்ப கருத்தரங்கிற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், துணை தலைவர் டி.ஜெ.தேசமுத்து, நிர்வாக அலுவலர் ஏழுமலை,கல்லூரி முதல்வர் டி.பழனி முன்னிலை வகித்தனர். துறை தலைவர் ஆர்.ஜனார்த்தனம் வரவேற்றார். கருத்தரங்கு துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட மிடோசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவன தலைமை செயல் தலைவர் சத்யன் சிவப்பிரகாசம் பேசுகையில் கணினி துறையில் வேலைவாய்ப்பிற்கு ஒரே தகுதி அவ்வப்போதைய கணினி துறை முன்னேற்றத்தை கற்று அறிவதும், உயர் லட்சியத்தை நோக்கி உழைப்பதும், காலத்தை முறையாக பயன்படுத்துவதும், நண்பர்களுடன் அறிவுப்பூர்வமான தகவல்களை பரிமாறிக் கொள்வதுமே ஆகும் என்றார். இந்த கருத்தரங்கில் 70 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களின் 240 ஆராய்ச்சி கட்டுரைகள் போட்டிக்கு கலந்துக் கொண்டதில் 90 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கட்டுரை தொகுப்பு சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது. மேலும் இந்த கருத்தரங்கில் பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இணைய வடிவமைப்பு உள்ளிட்ட 12 போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எல்.அண்ட்.டி நிறுவன திட்ட மேலாளர் ஏ.பி.மகேஷ்வரன் பரிசுகளை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்