முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் : கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தஞ்சாவூர் மாவட்டப் பிரிவின் சார்பாக அரசுத்துறை அலுவலர்கள் மற்றும பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் (இருபாலர்) நேற்று (22.02.2017) மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தொடங்கிவைத்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார்.

 

விளையாட்டு போட்டி

 

இப்போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசுத்துறை அலுவலகங்களிலிருந்து தடகள போட்டியில் ஆண்கள் பிரிவில் 120 பேரும். பெண்கள் பிரிவில் 40 பேரும். இறகுப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 56 பேரும் பெண்கள் பிரிவில் 20 பேரும். கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 5 அணியினர் பெண்கள் பிரிவில் 2 அணியினர், கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 4 அணியினர், டென்னி;ஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் 5 பேரும். பெண்கள் பிரிவில் 5 பேரும், கபாடி போட்டியில் ஆண்கள் பிரிவில் 4 அணியினர் பெண்கள் பிரிவில் 4 அணியினர், வாலிபால் போட்டியில் ஆண்கள் பிரிவில் 3 அணியினர் பெண்கள் பிரிவில் 3 அணியினர், டேபிள் டென்னி;ஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் 5 பேரும். பெண்கள் பிரிவில் 5 பேரும் ஆக மொத்தம் 400 பேர் இப்போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர்.

பின்னர் 100 மீட்டர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழினை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வழங்கினார்.முன்னதாக 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தினை துவக்கிவைத்து, மாவட்ட கலெக்டர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும்;, வாலிபால் போட்டிகளிலும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜசேகரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உதயக்குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க.பாபு மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago